Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெற்றிக்கண் நடிகருக்கு பரிந்துரை செய்த நயன்தாரா!

நெற்றிக்கண் நடிகருக்கு பரிந்துரை செய்த நயன்தாரா!
, புதன், 1 செப்டம்பர் 2021 (10:24 IST)
நடிகை நயன்தாரா நெற்றிக்கண் படத்தில் நடித்த அஜ்மலுக்கு தன்னுடைய அடுத்த படத்தில் பரிந்துரை செய்துள்ளாராம்.

நடிகர் அஜ்மலை இயக்குனர் மிஷ்கின் தன்னுடைய சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் அவர் நடித்த கோ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் புகழை ஈட்டித்தந்தது. சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால் அந்த படங்கள் வெற்றி பெறாததால் வாய்ப்புகள் குறைந்தன.

இதையடுத்து இப்போது அவர் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தில் ஒரு கொடூரமான வில்லனாக நடித்திருக்கிறார். இதன் மூலம் மீண்டும் அவருக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் இயக்குனர் மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் அவர் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் நயன்தாரா அடுத்ததாக நடிக்கும் மலையாளப் படத்தில் அவர் அஜ்மலுக்கு ஒரு முக்கியமான வேடத்தை பரிந்துரை செய்துள்ளாராம். நெற்றிக்கண் படத்தில் அவரின் நடிப்பு பிடித்ததால் இதை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓடிடிக்குதான் டாக்டர்… பொருத்தமான தேதி தேடும் தயாரிப்பாளர்!