கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பதும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் தனி விமானத்தில் கொச்சி சென்று அங்கு நயன்தாராவின் வீட்டில் ஓணம் கொண்டாடினர். கேரளாவில் ஓணம் பண்டிகை இன்று மிக விமர்சையாக கொண்டாடப்படுவதை அடுத்து நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் நெருக்கமாக ரொமான்டிக் ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கேரளாவில் ஓணம் பண்டிகையை கொண்டாடி முடித்து விட்டு இருவரும் அடுத்த வாரம் சென்னை திரும்புவார்கள் என்பது என்றும் அதன்பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க உள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே நயன்தாரா, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்களின் படப்பிடிப்புகளும் விரைவில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது