Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து விலகிய நயன்தாரா?

விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து விலகிய நயன்தாரா?

vinoth

, செவ்வாய், 16 ஜனவரி 2024 (16:47 IST)
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் இந்த படத்தை  முதலில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படத்தின் அதிக பட்ஜெட் காரணமாக இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விலக, லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார். படத்தில் ப்ரதீப்புக்கு சகோதரி வேடத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது அவர் அந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த படத்தில் சீமான் நடிப்பது உறுதியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான்கே நாட்களில் ‘அயலான்’ வசூல் செய்த தொகை.. கேஆர்ஜி ஸ்டுடியோஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!