நடிகர் விஜய் அடுத்ததாக தில் ராஜு தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல் கடந்த சில நாட்களாக இணையதளங்களில் வைரலாகி வந்தது என்பது தெரிந்ததே. விஜய்யின் அடுத்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க இருப்பதாகவும் அந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த படத்தில் விஜய்க்கு 118 கோடி ரூபாய் சம்பளம் என்று சில நாட்களாக செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் தயாரிப்பில் பிவிபி சினிமாஸும் ஒரு பங்குதாரராக இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.