கடந்த வருடம் மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர்.
இப்படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இப்படத்தின் வெற்றியால் மற்ற மொழி படங்களிலும் ரீமேக் செய்யும் ஆர்வததைத் தூண்டியுள்ளது. இதையடுத்து இந்த படம் இப்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. அதில் மோகன் லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை ரீமேக் படங்களை இயக்குவதில் வல்லுனரான மோகன் ராஜா இயக்க உள்ளார். சிரஞ்சீவி தவிர்த்த மற்ற கதாபாத்திரங்களின் தேர்வுகள் நடந்து வரும் நிலையில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் மோகன் ராஜா. ஏற்கனவே அவர் இயக்கிய தனி ஒருவன் மற்றும் வேலைக்காரன் ஆகிய படங்களில் நயன்தாரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்படத்திற்கு வந்தா வென்றான், காஞ்சனா போன்ற படங்களுக்குத் தன் தனித்துவமான இசையால் மக்களைக் கவர்ந்துள்ள இசையமைப்பாளர் எஸ். தமன்.
இவர், மெகா ஸ்டர் சிரஞ்சீவி நடிக்கும் லூசிபர் தெலுங்குப் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்த லூசிபர் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், எஸ் தமன் தனது டுவிட்டர் பக்கத்தில் இதை உறுதி செய்து ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், எந்த ஒரு கம்போசருக்கும் மிகப்பெரிய கனவு…தற்போது எனக்கு நிறைவேறியுள்ளது. எந்து லவ்வை மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு உரித்தாகுக….மை டியர் புரோ மோகன் ராஜா..லூசிபர் படத்தில் எனது இசைப்பணி தொடங்குகிறது கடவுள் ஆசீர்வதிப்பார் எனத் தெரிவித்துள்ளார்.