நடிகை ஓவியா பல படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பிறகு தான் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். ஆனால் தற்போது 90ml படத்தில் நடித்து அத்தனையும் கெடுத்துக்கொண்டார்.
நீண்ட இடைவேளைக்கு 90 Ml படத்தில் நடித்துள்ள ஓவியாவை நெகடீவ் விமர்சனங்களை கொண்டு வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்ஸ். அந்த அளவிற்கு ஓவியா இந்தப்படத்தில் புகைபிடிப்பது , தண்ணி அடிப்பது, கஞ்சா அடிப்பது , லிப் லாக் என்று அத்தனை மோசமான காரியங்களையும் செய்து அதை பெஃமினிசம் என்று சொல்லி ரசிகர்களின் வெறுப்புக்குள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள ஓவியா, எனக்கு பிடிச்சிருக்கு நடிச்சுறுக்கேன். என் படத்த பாக்க பிடிக்கலனா பார்க்காதீங்க. அத விட்டுட்டு ஓவரா பேசாதீங்க என கூறியுள்ளார்.