இயக்குனர் ராம்கோபால் வர்மா பவன் கல்யாணைக் கலாய்க்கும் விதமாக ஒரு டிவிட் செய்துள்ளார்.
தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் வக்கீல் சாப் திரைப்படம் கடந்த 9 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படார். இந்நிலையில் தான் சிகிச்சைப் பெறும் புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டு இருந்தார்.
அந்த புகைப்படத்தைப் பகிர்ந்த இயக்குனர் ராம்கோபால் வர்மா இந்த படத்தில் போலியாக எது உள்ளது என்பதை சரியாகக் கணிப்பவர்களின் புகைப்படத்தை நான் பகிர்வேன். என்று கூறியுள்ளார். மேலும் படத்தில் கலை இயக்குனரின் வேலையில் குற்றம் உள்ளது என்றும் கூறி அவரைக் கலாய்த்துள்ளார்.