Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிசாசு 2 சிங்கிள் ரிலிஸ்… குழப்பத்தில் மிஷ்கின்!

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (16:56 IST)
இயக்குனர் மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தின் முதல் சிங்கிள் பாடல் அடுத்த வாரம் வெளியாக உள்ளது.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. அந்த படத்தில் பிசாசு எதிர்மறை கதாபாத்திரத்தில் உருவாக்காமல் தேவதையை போல உருவாக்கியிருந்தார் மிஷ்கின். அதனால் அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் மிஷ்கின். இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக கார்த்திக் ராஜா மிஷ்கின் படத்துக்கு இசையமைக்க உள்ளார். மற்றொரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கும் பூர்ணா நடித்து வருகிறார்.

பல வருடங்களுக்கு ரி எண்ட்ரி கொடுக்க வேண்டும் என்பதற்காக கார்த்திக் ராஜா இந்த படத்துக்காக கடுமையாக உழைத்துள்ளார். இந்நிலையில் படத்துக்காக நான்கு பாடல்களை சிறப்பாக போட்டுக் கொடுத்துள்ளாராம் அவர். இந்நிலையில் இதில் எந்த பாடலை முதலில் ரிலீஸ் செய்து படத்தை பற்றிய எதிர்பார்ப்பை ஏற்றலாம் என மிஷ்கின் குழப்பத்தில் உள்ளாராம். அடுத்த வாரம் இந்த நான்கில் ஒரு பாடலை கண்டிப்பாக ரிலீஸ் செய்வார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை அதுல்யா ரவியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

‘வாழை’ படப் புகழ் திவ்யா துரைசாமியின் க்யூட் க்ளிக்ஸ்!

இந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

தொடர்ந்து செய்த தவறு… இம்பேக்ட் பிளேயருக்கும் சேர்த்து அபராதம்!

'தக்லைஃப்’ பேனரை கிழித்து ஆர்ப்பாட்டம்.. கன்னட அமைப்புகளால் படத்திற்கு தடையா?

அடுத்த கட்டுரையில்
Show comments