தமிழ் திரையுலகின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானதை அடுத்து திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரை உலகின் தமிழ் மட்டும் இன்றி பல தென்னிந்திய மொழிகளில் 35 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 6000 பாடல்கள் பாடியவர் உமா ரமணன் என்பதும் குறிப்பாக அவர் இளையராஜாவின் இசையில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் திரைப்பட பாடகி உமா ரமணன் உடல்நல குறைவால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 69 . பன்னீர் புஷ்பங்கள் என்ற திரைப்படத்தில் ஆனந்த ராகம் என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமான உமாரமணன் நிழல்கள்' தில்லுமுல்லு வைதேகி காத்திருந்தாள் திருப்பாச்சி உட்பட பல படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
உமா ரமணன் பாடிய பூங்கதவே தாழ் திறவாய் என்ற பாடல் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர் இசைஞானி இளையராஜா, மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன், சங்கர் கணேஷ், தேவா உள்ளிட்ட பலரது இசையில் பாடியுள்ளார். பாடகி உமா ரமணன் மறைவிற்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.