Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்கி படம் இவ்வளவு நேரம் ஓடுமா?... ரசிகர்களை ஜெர்க் ஆக்கும் ரன்னிங் டைம் தகவல்!

கல்கி படம் இவ்வளவு நேரம் ஓடுமா?... ரசிகர்களை ஜெர்க் ஆக்கும் ரன்னிங் டைம் தகவல்!

vinoth

, செவ்வாய், 18 ஜூன் 2024 (09:30 IST)
பாகுபலி 2 க்குப் பின் பிரபாஸ் நடித்த எந்த திரைப்படமும் அவருக்குக் கைகொடுக்கவில்லை. வரிசையாக ப்ளாப் ஆகின. இந்நிலையில் இப்போது அவர் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 AD என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.. இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லன் வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தவிர அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் ஜூன் 27 ஆம் தேதி ரிலீஸாகிறது. மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் இந்தியா முழுமைக்கும் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது.

சமீபத்தில் வெளியான டிரைலர் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 50 நிமிடம் ஓடும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரவிந்த் சாமி தொடுத்த வழக்கில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத் தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட்!