பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடித்துள்ள சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான். இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரித்துள்ளார். கே ஜி எஃப் இசையமைபபாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.
கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 22 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆனது. பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களுக்குப் பின்னர் பிரபாஸ் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்களை திருப்திப் படுத்தாததால் இந்த படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, இந்தியா முழுவதும் அதிக அளவிலான திரைகளில் ரிலீஸ் ஆனது. ஆனால் ரிலீஸுக்கு பிறகு இந்த படம் ரசிகர்களை பெரியளவில் ஏமாற்றி, மோசமான விமர்சனத்தையும் வசூலையும் பெற்றது.
இன்னும் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. சலார் முதல் பாகத்தின் தோல்வியால் இரண்டாம் பாகத்தை கைவிடப்போவதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சலார் படக்குழு பிரபாஸும் இயக்குனர் பிரசாந்த் நீலும் சிரிப்பது போல இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “அவர்களால் சிரிப்பதை நிறுத்தமுடியவில்லை” எனக் கூறியுள்ளார்.