தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான பிரபு சாலமன் தொடரி படத்தின் தோல்வி குறித்துப் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு மைனா மற்றும் கும்கி ஆகிய படங்களின் மூலம் தனது முத்திரையைப் பதித்தவர் இயக்குனர் பிரபு சாலமன். அதைத் தொடர்ந்து அவருக்கு தனுஷை வைத்து தொடரி படத்தை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
அதையடுத்து இப்போது பிரபு சாலமன் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் காடன் என்ற படத்தினை இயக்கியுள்ளார். இது சம்மந்தமாக அவர் ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள நேர்காணலில் தொடரி படத்தின் தோல்வி குறித்து பேசியுள்ளார்.
``அந்தக் கதையை நான் தனுஷுக்குனு பண்ணல. அக்டோபர் ஷூட்டிங் போலாம்னு இருந்தோம். ஜூலையில ஷூட்டிங் போக வேண்டிய கட்டாயம். அதனால நல்லா டீடெயிலிங் பண்ணமுடியலை. தனுஷ் எனக்கு அவ்ளோ சப்போர்டா இருந்தார். ஆனா, அவர் நடிப்புக்கு என்னால அந்தப் படத்துல சரியா தீனி போடமுடியல. டீயெலிங் பண்ணாம, விஷுவல் எஃபெக்ட்ஸை மட்டும் நம்பிப் போகக்கூடாதுனு கத்துக்கிட்டேன். எல்லா இயக்குநர்களும் இந்த மாதிரி சூழலைக் கடந்துபோவாங்க. இந்தக் கதையை இந்தப் பூனையை வெச்சுதான் பண்ணணும்னா அதுதான் பண்ணனும்னு புரிஞ்சுகிட்டேன்" எனக் கூறியுள்ளார்.