செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி இவருக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே சேர்ந்துவிட்டது.
அதனையடுத்து எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து ஜீவா, அருள்நிதி நடிக்கும் படங்களிலும் நடிக்கிறார். இதையடுத்து துல்கர் சல்மான் உடன் ஒரு படத்தில் நடிக்கிறார். சிங்கிள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்துவரும் பிரியா பவானி கொஞ்சம் கேப் கிடைக்கும்போதெல்லாம் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாகிவிடுவார்.
அந்தவகையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட ஒரு பதிவிற்கு பெண் ஒருவர் எதிர்மறையான கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு தெளிவான விளக்கத்தை பிரியா பவானி சங்கர் கொடுத்திருந்ததும் அவரின் ரசிகர்கள் அந்த பெண்ணை விடாமல் மோசமான வார்த்தைகளால் திட்டிதீர்த்தனர்.
இத்தனால் செம கடுப்பான பிரியா, " அந்த பெண்ணை திட்டும் உரிமை நமக்கு இல்லை, நாகரீகமாக தான் பதில் சொல்ல வேண்டும்.. எனக்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்பதற்காக தவறான வார்த்தைகளால் அந்த பெண்ணை திட்டுவது எனக்கு பிடிக்கவில்லை. நாகரீகமாக பதில் அளித்தவர்களுக்கு நன்றி என கூறி பதிவிட்டுள்ளார்.