Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கோட் படத்தின் ’சின்ன சின்ன கண்கள்’ பாடலை ஒரிஜினலாக பாடியது யார்? ஆச்சரிய தகவல்..!

கோட் படத்தின் ’சின்ன சின்ன கண்கள்’ பாடலை ஒரிஜினலாக பாடியது யார்? ஆச்சரிய தகவல்..!

Mahendran

, செவ்வாய், 25 ஜூன் 2024 (15:36 IST)
தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் இடம் பெற்ற சின்ன சின்ன கண்கள் என்ற பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது தெரிந்தது. 
 
இந்த பாடலை விஜய் பாடினார் என்பதும் அவருடன் மறைந்த பாடகி பவதாரணி ஏஐ குரல் பாடியது என்பதும் நீண்ட இடைவேளைக்கு பிறகு பவதாரணி குரலை கேட்ட ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் தெரிந்தது. 
 
இந்த நிலையில் இந்த பாடலை ஒரிஜினலாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா தான் பாடினார் என்றும் அவரது குரலைதான் பவதாரணி குரலாக ஏஐ டெக்னாலஜி மாற்றியது என்றும் யுவன் சங்கர் ராஜாவின் இசைக்குழிவில் உள்ள ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். 
 
பவதாரணி  பாடினால் எப்படி இருக்கும் என்பது போலவே நீங்கள் பாட வேண்டும் என்று பிரியங்கா அவர்களிடம் கேட்டுக் கொண்டதாகவும் அவரும் பயிற்சி எடுத்து பாடியதை அடுத்து அதன் பிறகு ஏஐ மூலம் அந்த குரல் பவதாரணி குரலாக மாற்றப்பட்டது என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார். 
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாபநாசம் புகழ் எஸ்தர் அனிலின் போட்டோஷூட் ஆல்பம்!