Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதிய போஸ்டரை வெளியிடட் ராதே ஷ்யாம் படக்குழு!

புதிய போஸ்டரை வெளியிடட் ராதே ஷ்யாம் படக்குழு!
, திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (16:02 IST)
பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கும் ராதே ஷ்யாம் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சாஹோ படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் ராதே ஷ்யாம்.. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ராதா கிருஷ்ணன் இயக்கி வருகிறார். இந்த பிரம்மாண்டமான படத்துக்கு இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க காதல் படம் என சொல்லப்பட்டது. ஆனாலும் பிரபாஸின் சம்பளம் எல்லாம் சேர்த்து மொத்தமாக 300 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தை ப்ரமோட் செய்யும் பணிகளை இப்போது படக்குழு தொடங்கியுள்ளது. இன்று பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே இருக்கும் ரொமாண்டிக்கான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாட்ஷா படத்தை ரீமேக் செய்ய விருப்பம் காட்டும் முன்னணி நடிகர்!