ராகவா லாரன்ஸ் இயக்கிய முனி, காஞ்சனா சீரிஸ் படங்களில் பேயுடன் கூடிய காமெடி தான் அவரது டிரெண்டே. ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல் ராகவா லாரன்ஸ் பேய்ப்படங்களை பார்த்து ரசிகர்களுக்கு சலித்து போய்விட்டது. 'காஞ்சனா 3' படம் சரியான நேரத்தில் ரிலீஸ் ஆனதாலும் குழந்தைகளை கவர்ந்ததாலும் வசூலில் தப்பித்தது
இந்த நிலையில் இனிமேல் தனது காஞ்சனா படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் பேய் இல்லை என்று ராகவா லாரன்ஸ் முடிவு செய்துவிட்டாராம். பேய்க்கு பதில் தனது படங்களில் பாம்புகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளாராம். அடுத்த படத்திற்கு 'கால பைரவா' என்ற டைட்டிலும் வைக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த படத்தையும் 'காஞ்சனா 3' படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும், இந்த படத்திலும் தேவதர்ஷினி, ஸ்ரீமான், கோவை சரளா உள்ளிட்ட தனது நகைச்சுவை பட்டாளங்களை அவர் இணைக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது
ராகவா லாரன்ஸ் தற்போது 'காஞ்சனா' திரைப்படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் அவர் 'காலபைரவா' படப்பிடிப்பை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது