நடிகை ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்தில் ராஜ மாதா கேரக்டர் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளார். நடிகை ரம்யா கிருஷ்ணன் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானது தமிழ் சினிமா என்று தான் திரையுலகில் அனைவரும் நினைத்தனர்.
ஆனால் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், எனது முதல்படம் மலையாளத்தில் 1984ம் ஆண்டு மம்முட்டி, மோகன்லால் இருவரும் இணைந்து நடித்த ‘நேரம் புலரும்போல்‘ என்ற திரைப்படத்தில், எனது 13 வயதில் நாயகியாக அறிமுகம் ஆனேன். ஆனால் அந்தப் படம் வெளியாக காலதாமதம் ஆனது.
இதனை தொடர்ந்து இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் டி.ராஜேந்தர் இருவருமே தனது நாட்டிய ஆல்பத்தைப் பார்த்து விட்டு ஒப்பந்தம் செய்ய அணுகியதாகவும் இரண்டில் ஒரு வாய்ப்பைத் தேர்ந்தெடுக்க கால தாமதமானதால் அந்த இரு படவாய்ப்பும் கை நழுவியதாகவும் கூறியுள்ளார். அது கடலோரக் கவிதையும், மைதிலி என்னைக்காதலி படங்கள் தான். மேலும் தன்னை தனியாக அடையாளம் காண்பித்தது ஆந்திரா டோலிவுட் எனவும், தமிழில் படையப்பா, பஞ்ச தந்திரம் ஆகிய படங்கள் பெரிய பெயர்களை வாங்கி கொடுத்தது என்று கூறியுள்ளார்.