தற்போது தமிழ்த்திரையுலகிற்கு ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையை எதிர்த்து திரையுலகினர் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
நேற்று கமல்ஹாசன் ஒரு காட்டமான அறிக்கையை வெளீயிட்ட நிலையில் ரஜினி, அஜித், விஜய் போன்றவர்களும் ஜிஎஸ்டி மற்றும் தமிழக அரசின் வரிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. நேற்றிரவு கூட இயக்குனர் சேரன் ரஜினிக்கும், ரஹ்மானுக்கு இந்த கோரிக்கையை விடுத்தார்
இந்த நிலையில் சற்று முன்னர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் இதுகுறித்து தமிழக அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது: தமிழ் திரையுலகில் பணிபுரியும் லட்சக்கணக்கானவர்கள் நலனை கவனத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க கேளிக்கை வரி விவகாரத்தில் திரைத்துறையினரின் கோரிக்கையை பரிசீலிக்கவும்' என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.