ஸ்ருதி ஹாஸன் பேட்டி ஒன்றில், "யார் ஆதரவிலும் நான் நடிகை ஆகவில்லை. என்னுடைய முயற்சியால்தான் நடிகையானேன். அப்பா சாதனையில் ஒரு சதவீதம் கூட நான் இதுவரை சாதிக்கவில்லை.
இன்றைய சூழ்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. காரணம் ஆண்களுக்கு தான் நமது நாட்டில் மரியாதை அதிகம். ஆண்குழந்தை பிறந்தால் கொண்டாடுவார்கள். ஆனால் எங்கள் வீட்டில் அப்படி அல்ல. எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தால், நான் அவனுக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுப்பேன் என்றார்.
நான் ஒரு தமிழ் பெண் என்பதில் பெருமைப்படுகிறேன். யாராவது தமிழ் நாட்டையோ, தமிழர்களையோ யார் குறை சொன்னாலும் அவர்களை ஒரு வழி பண்ணிடுவேன். மும்பையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா எல்லா மாநிலங்களையும் சேர்த்து ‘மதராசி' என்று கிண்டல் செய்பவர்களுக்கு, நான் தமிழ்நாட்டை பற்றி பாடம் நடத்துவேன்.
நேரம் இல்லாததால் அப்பா நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் இன்னும் பார்க்கவில்லை. சீக்கிரம் பார்ப்பேன். மேலும் கூறிகயில் ரஜினி சார் கண்டிப்பா அரசியலுக்கு வரணும். அவரது வருகை இந்தத் துறைக்கும் பெரிய மரியாதை கிடைப்பதோடு, மாற்றத்தையும் உண்டாக்கும் என எதிப்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.