Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

காலையில் மறைந்த காஞ்சி பெரியவர் மறைவிற்கு இரவில் இரங்கல் தெரிவித்த ரஜினி

காலையில் மறைந்த காஞ்சி பெரியவர் மறைவிற்கு இரவில் இரங்கல் தெரிவித்த ரஜினி
, புதன், 28 பிப்ரவரி 2018 (22:55 IST)
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் இன்று காலை 9 மணிக்கு மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனை சிகிச்சையின் பலனின்றி காலமானார். அவர் காலமான அடுத்த சில நிமிடங்களில் ஜனாதிபதி, பிரதமர் முதல் பல விவிஐபிக்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கலை தெரிவித்தனர். மேலும் ஏராளமானோர் நேரில் வந்து ஜெயேந்திரருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் அரசியல் களத்தில் புதியதாய் நுழைய போகும் ரஜினிகாந்த் காலை 9 மணிக்கு மரணம் அடைந்த சங்கராச்சாரியாருக்கு இரவு 9 மணிக்கு தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் டுவீட்டில், 'பூஜ்யஸ்ரீ ஸ்ரீ காஞ்சி பெரியவருடைய ஆத்மா பரமாத்மாவுடன் இணைந்த இந்த நாளில், அவரை இழந்து வாடும் பக்தர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்' என்று தெரிவித்துள்ளார். மேலும் சங்கராச்சாரியர் மறைவை அடுத்து நாளை வெளியாகவிருந்த அவருடைய 'காலா' படத்தின் டீசரையும் ஒருநாள் தள்ளிவைத்துள்ளார்

ஏற்கனவே கமல்ஹாசன் அவர்களும் இன்று மாலை காஞ்சி பெரியவரின் மறைவிற்கு இரங்கல் அறிக்கை ஒன்றை  வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலா டீசர் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்: ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம்