Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினியின் ' லால் சலாம்' பட கிளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ்

Lal Salaam -Rajinikanth
, செவ்வாய், 12 டிசம்பர் 2023 (19:35 IST)
ரஜினியின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று லால் சலாம் படக்குழு அவர் சம்பந்தப்பட்ட கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

சினிமாவின் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்  நடிப்பில் ஜெயிலர் படத்திற்குப் பின் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே அவர் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில், 'லால் சலாம்' படத்தில் நடித்து வந்தார்.

இப்படத்தில்  மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடித்துள்ள நிலையில், இந்த படத்தில் ரஜினி  சம்மந்தமான சில காட்சிகள் மும்பையில் சில மாதங்களுக்கு முன்னர் படமாக்கப்பட்டது.

இப்பட ஷூட்டிங் முடிந்த நிலையில்,  இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  எனவே  2024 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இன்று ரஜினியின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று லால் சலாம் படக்குழு அவர் சம்பந்தப்பட்ட கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஐஸ்வர்யா ரஜினியின் மேக்கிங்கில் ரஜினி வரும் ஆக்சன் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று, வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் டிசம்பர் 20 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனக்கும் ஆருத்ரா மோசடிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை: ஆர்.கே.சுரேஷ்