ஜி.எஸ்.டி. வரி குறித்து, ஒருவழியாக வாய் திறந்துள்ளார் ரஜினி.
ஜி.எஸ்.டி. வரி மற்றும் உள்ளாட்சி கேளிக்கை வரி ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, மூன்றாவது நாளாக அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. தமிழ் சினிமா சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த சுமூகத் தீர்வும் ஏற்படவில்லை. இதுகுறித்து தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.
கமல் நேற்று காட்டமாகத் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ள நிலையில், அமெரிக்காவில் இருக்கும் ரஜினியும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘தமிழ் சினிமாவில் பணிபுரியும் லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, எங்கள் வேண்டுகோளைப் பரிசீலிக்கும்படி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்’ என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ரஜினி.