நடிகை ராஷி கண்ணா சர்தார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
கார்த்தி நடித்த சுல்தான் சமீபத்தில் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படங்கள் எல்லாம் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் விதமாக உள்ளன. பி எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார், முத்தையா இயக்கத்தில் விருமன் மற்றும் இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் என நடித்து வருகிறார். இதில் சர்தார் தவிர்த்து மற்ற இரு படங்களின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.
இப்போது சர்தார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ராஷி கண்ணா படப்பிடிப்பு தளத்தின் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். ரயில்வே நிலையம் போல செட் அமைக்கபப்ட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தைப் பகிர்ந்த ராஷிகண்ணா நள்ளிரவு படப்பிடிப்பு எனக் கூறி கொட்டாவி விடுவது போன்ற ஒரு எமோஜியையும் சேர்த்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.