பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், பெங்காலி என பல மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது ஹாலிவுட்டிலும் தடம் பதித்திருக்கிறார். தி வெட்டிங் கெஸ்ட் மற்றும் பெயரிடப்படாத ஹாலிவுட் படத்திலும் ராதிகா ஆப்தே நடித்து வருகிறார்.
தனது சினிமா அனுபவங்களை தனியார் செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்து கொண்ட ராதிகா ஆப்தே, நான் நடிக்க தேர்வு செய்யும் கதாபாத்திரம், எந்த விதத்திலாவது எனது ஆர்வத்தை தூண்ட வேண்டும்.
நான்கு வருடங்களுக்கு முன்பு எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் ஏற்று நடித்திருப்பேன். இப்போது அப்படியில்லை. ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் மற்றும் அர்த்தம் இல்லாத பாத்திரங்களில் நடிப்பதை தவிர்த்து விடுகிறேன் என்றார்.
சினிமா ஆசையில் மும்பைக்கு வந்த புதிதில் யாரை பார்ப்பது, எப்படி வாழ்வது என்று தெரியாமல் தவித்தேன். மும்பையில் நான் வந்த ஆரம்ப காலங்களில் (2008), 3000 ரூபாய் சம்பளத்துக்கு நாடகங்களில் நடித்தேன் என்றும் கூறியுள்ளார்.