ஒரு காலத்தில் தென்னிந்திய மொழிகளின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. ஆனால் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அவர் இயக்கத்தை விட்டார். நடிகராக ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், அவரால் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முடியவில்லை.
சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அவர் இறைவி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த முறை கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எல்லா வகையான கதாபாத்திரங்களையும் கலந்து கட்டி நடித்தார். சமீபத்தில் அவர் வில்லனாக நடித்த மாநாடு மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய இரு படங்களும் வெற்றி பெற்று அவரின் நடிப்பு பெரிதாக சிலாகிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி மற்றும் பிரியங்கா மோகன் நடிக்கும் சரிபோதா சனிவாரம் என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்போது அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ள நிலையில் ஷூட்டிங்கில் அவர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.