கார்த்தி நடித்துள்ள சுல்தான் திரைப்படம் 90 சதவீதம் முடிந்துவிட்டது என அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தெரிவித்துள்ளார்.
நடிகர் கார்த்தி ரெமோ படத்தின் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் "சுல்தான்" படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்துள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு ‘சுல்தான் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமிருக்கும் பணிகள் கொரோனா லாக்டவுனுக்குப் பின்னர் நடக்கும். ரிலிஸ் பற்றி எந்த திட்டமும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.