விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்து உருவாகும் குஷி திரைப்படத்தை ஷிவா நிர்வாணா இயக்குகிறார்.
கீர்த்தி சுரேஷ் துல்கர் சல்மான் நடித்த நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் ஜோடியாக நடித்தார்கள் என்பது தெரிந்ததே. விஜய் தேவரகொண்டா நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது, ஷிவ் நிர்வானா என்பவர் இயக்கத்தில் மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகயிருக்கும் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.
இந்த படத்தின் டைட்டிலை சமீபத்தில் குஷி என்று அறிவிக்கப்பட்டது. இந்த புதிய திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டி டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் கடந்த ஒரு மாதமாக நடந்தது. நேற்று படப்பிடிப்புக் குழுவினர் படப்பிடிப்பை முடித்து ஐதராபாத் திரும்பினர்.
ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் விபத்து நடந்ததாகவும், அதில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோர் காயமடைந்ததாகவும் போலியான செய்தி ஒன்று பரவியது. அதை தற்போது இயக்குனர் ஷிவா நிர்வாணா மறுத்துள்ளார். இது சம்மந்தமாக டிவிட்டரில் போலியான செய்தி என்று மறுத்துள்ளார்.