தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் சரத்குமார். இப்போது படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வரும் அவர், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கட்சி சம்மந்தமான கூட்டம் ஒன்றில் அவர் பேசியது இணையத்தில் கவனத்தை ஈர்த்தது.
அவரது பேச்சில் “எனக்கு இப்போது 69 வயது ஆகிறது என்னால் 150 வயது வரை உயிர் வாழ முடியும் அந்த வித்தை நான் கற்றுக் கொண்டுள்ளேன், அந்த வித்தையை நான் பிறருக்கு கற்றுக் கொடுக்க வேண்டுமென்றால் 2026ல் என்னை முதலமைச்சராகுங்கள் ” என பேசி இருந்தார்.
இந்த பேச்சுக்கு எதிராக கேலிகள் எழுந்த நிலையில் இப்போது அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் சரத்குமார். அதில் “ஒரு கூட்டத்தில் பேசும்போது இறுக்க நிலையை சரிசெய்வதற்காக அப்படி பேசினேன். அது இவ்வளவு பெரிய செய்தியானது எனக்கே ஆச்சர்யமாக உள்ளது. ஒரு கட்சி தலைவராக முதல்வராக வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது. அதை மறுக்க முடியாது. அதற்காக நான் முயல்வேன்” என விளக்கம் அளித்துள்ளார்.