கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி வெளியான திரைப்படம் சர்தார். இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்துள்ளது.
தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் இதுவரை அதற்கான எந்த முன்னெடுப்பும் செய்யப்படவில்லை.
இந்நிலையில் இப்போது சர்தார் 2 படத்துக்கான வேலைகளை இயக்குனர் மித்ரன் தொடங்கியுள்ளதாகவும், ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது நலன் குமாரசாமி மற்றும் பிரேம் குமார் இயக்கத்தில் நடித்து வரும் படங்களை முடித்தபின்னர் இந்த படத்தில் கார்த்தி இணைவார் என சொல்லப்படுகிறது.