ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். இதில் கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் வரும் தீபாவளி அன்று பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. படத்தின் அனைத்து காட்சிகளும் நிறைவடைந்த நிலையில் படத்தின் இதர வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் படத்தின் கதைகுறித்த தகவல் கசிந்துள்ளது. உலக அளவில் பெரிய தொழிலதிபராக விஜய் நடிக்கிறார். அமெரிக்காவிலிருந்து இந்தியா வருகிறார் விஜய். அப்போது வாக்களர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாததைக் கண்டு கோபமடையும் விஜய் இதுகுறித்து விசாரிக்கும் போது எல்லோரும் அலட்சியம் காட்டுகின்றனர்.
பின்பு விஜய்யே களத்தில் இறங்கி இதற்கென வேலைப்பார்ப்பது தான் சர்கார் திரைப்படம் என்ற தகவல் வெளியாகிவுள்ளது. இவ்வளவு நாள் கண்ணும் கருத்துமாக படக்குழுவினர் வேலைப்பார்த்து வந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. படம் எதுகுறித்து என்பது பற்றி அறிய தீபாவளி வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.