Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அயோத்தி படத்தை பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்… ‘இது ஒன்னே போதும்’ என நெகிழ்ந்த சசிகுமார்!

அயோத்தி படத்தை பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்… ‘இது ஒன்னே போதும்’ என நெகிழ்ந்த சசிகுமார்!
, செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (14:39 IST)
சசிகுமார், புகழ் மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்த ‘அயோத்தி’ திரைப்படம் கடந்த மார்ச் மாதம் ரிலீஸ் ஆனது. அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புனிதப் பயணம் வரும் ஒரு குடும்பத்தில் நடக்கும் இறப்பு மற்றும் அது சம்மந்தமான பிரச்சனைகளை மனிதம் கலந்து சொல்லி இருக்கும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. சில ஆண்டுகளாக தொடர்ந்து தோல்விப் படங்களாகவே கொடுத்து வந்த சசிகுமாருக்கு இந்த படம் ஒரு கம்பேக் படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் இப்போது அயோத்தி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது. ஜி 5 தளத்தில் பல மொழிகளில் இந்த படம் தற்போது ஸ்ட்ரீம் ஆகியுள்ளது.

இந்த படத்தை ஓடிடியில் பார்த்த ரஜினிகாந்த் டிவிட்டரில் “அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப்படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!” என பாராட்டியிருந்தார். இந்த ட்வீட்டைப் பகிர்ந்துள்ள சசிகுமார் “நடிகர் என சொல்லாமல் நண்பர் என்று சொன்னதே பெருமையாக உள்ளது” என நெகிழ்ந்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாய் பேசமுடியாதவரை பேசவைத்த பாண்டியராஜன்… இதுதான் சினிமாவோட மேஜிக்கே!