நடிகர் சசிகுமார் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
நடிகர் கார்த்தி தனது பள்ளிதோழன் லக்ஷ்மன் ராஜா தயாரிப்பில் தேவ் என்ற படத்தில் நடித்தார். கைதியின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னர் வெளியான தேவ் திரைப்படம் படுதோல்வி அடைந்து மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் அந்த நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் கார்த்தி மறுபடியும் ஒரு படம் நடிக்க அதே நிறுவனத்துக்கு சம்மதம் தெரிவித்து அதற்கான கதை எல்லாம் கேட்டு வைத்திருந்தார்.
ஆனால் இப்போதைக்கு அவரால் அந்த படத்தில் நடிக்க முடியாததால் அந்த கதையில் அவருக்கு பதில் சசிகுமார் நடிக்க உள்ளாராம். இந்த படத்துக்கு காரி என்ற வித்தியாசமான தலைப்பை வைத்துள்ளார்களாம். காரி என்பது ஒரு வகையான மாட்டினத்தின் பெயர் என்று சொல்லப்படுகிறது.