Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிச்சை எடுக்கும் ஷங்கரின் உதவி இயக்குனர்.. யார் இந்த செல்வேந்திரன்?

பிச்சை எடுக்கும் ஷங்கரின் உதவி இயக்குனர்..  யார் இந்த செல்வேந்திரன்?
, திங்கள், 27 மார்ச் 2023 (16:16 IST)
சினிமாவில் வெற்றிப் படம் கொடுப்பவர்களுக்கே மாலையும் மரியாதையும் கிடைக்கும். தோல்விகளுக்கு அங்கு எந்த மதிப்பும் இல்லை. அப்படி தன்னுடைய முதல் படமே தோல்விப் படமாக அமைந்ததால் இயக்குனர் செல்வேந்திரன் இப்போது பிச்சை எடுக்கும் நிலைக்கு சென்றுள்ளார்.

முதலில் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த செல்வேந்திரன், பின்னர் இயக்குனர் ஷங்கரிடம் காதலன், இந்தியன் மற்றும் ஜீன்ஸ் ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். பின்னர் இவர் ஒரு காதலன் ஒரு காதலி என்ற படத்தை இயக்கினார். அந்த படம் தோல்விப் படமாக அமைந்த நிலையில் அவருக்கு அதன் பின்னர் படம் இயக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் பொருளாதார ரீதியாக நலிந்த நிலைக்கு சென்ற செல்வேந்திரன், தற்போது மிகவும் மோசமான நிலைக்கு ஆளாகி பிச்சை எடுத்து வாழ்க்கையைக் கடத்தி வருகிறார். அவர் சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி நெஞ்சை உருக வைத்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய அளவில் நம்பர் 1… ஃபார்ஸி வெப் சீரிஸ் படைத்த சாதனை!