மெர்சல் படத்திற்கு ஆதரவாக நடிகர் சாந்தனு கருத்து தெரிவித்துள்ளார்.
மெர்சல் படத்தில் நடிகர் விஜய் ஜி.எஸ்.டி பற்றி பேசிய சில வசனங்கள் பாஜகவினரை கொதிப்படைய செய்துள்ளது. தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போன்றோர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி குறித்த வசனங்களை நீக்க முடிவெடுத்திருப்பதாக படத்தின் தயாரிப்புக் குழு அறிவித்துள்ளது.
அந்நிலையில், மெர்சல் படத்திற்கு ஆதரவாக தமிழ் சினிமா துறையினர் களம் இறங்கியுள்ளனர். கமல்ஹாசன், விஷால், பார்த்தீபன் உள்ளிட்ட பலரும் விஜய்க்கு ஆதரவாகவும், பாஜகவிற்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சாந்தனு தனது டிவிட்டர் பக்கத்தில் “மெர்சல் படத்தை மறு தணிக்கை செய்வது ஜனநாயக நாட்டில் வெட்கக்கேடானது. அந்த மனுஷன விடுங்கப்பா. ஆனா ஊனா அவரு படத்தை கொக்கி போடுறீங்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இளையதளபதி விஜய் இப்போது ஜோசப் விஜய் ஆகிவிட்டாரா?. நகைச்சுவையாக இருக்கிறது. பிரச்சனைக்கு முடிவு கிடைக்கவில்லையெனில் இதுதான் முடிவா? ரொம்ப கேவலம்” எனவும் அவர் டிவிட் செய்துள்ளார்.