Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கைவிடப் படுகிறதா ‘கொரோனா குமார்’ திரைப்படம்?... பின்னணி என்ன?

கைவிடப் படுகிறதா ‘கொரோனா குமார்’ திரைப்படம்?... பின்னணி என்ன?
, புதன், 1 ஜூன் 2022 (16:05 IST)
கொரோனா குமார் திரைப்படத்தை சிம்புவை வைத்து இயக்க இருந்தார் இயக்குனர் கோகுல்.

நடிகர் சிம்புவை வைத்து இரண்டு படங்களை தயாரிக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஒப்பந்தம் செய்தார். அதில் முதல் படமான வெந்து தணிந்தது காடு திரைப்படம் அறிவிக்கப்பட்டு இப்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இரண்டாவது படமாக கொரோனா குமார் என்ற படம் உருவாகிறது. இதை இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட இயக்குனர் கோகுல் இயக்க உள்ளார்.

இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் இப்போது நடந்து வந்ததாக சொல்லப்பட்டது. படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் பஹத் பாசிலும், மற்றொரு முக்கியமான வேடத்தில் நடிக்கை வைகைப்புயல் வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது இந்த படம் கைவிடப்படுவதாக திடீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்கு பதிலாக சிம்பு நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் ஒரு படம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Source Valaipechu

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெண்டு நாளை தொடர்பு எல்லைக்கு அப்பால்…. புகைப்படத்தோடு A R ரஹ்மான் வெளியிட்ட தகவல்!