Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீயாய் வேலை பார்க்கும் சிம்பு – வெந்து தணிந்தது காடு இரண்டாவது போஸ்டர்!

தீயாய் வேலை பார்க்கும் சிம்பு – வெந்து தணிந்தது காடு இரண்டாவது போஸ்டர்!
, வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (11:26 IST)
சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இன்று இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் தொடங்கியுள்ள புதிய படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்திற்கான முதற்கட்ட போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில் படப்பிடிப்பு தொடங்க இருந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் சிம்புவின் முந்தைய பட விவகாரம் காரணமாக அவருக்கு ரெட் கார்டு விதித்ததால் படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது பேச்சுவார்த்தையை தொடர்ந்து சிம்பு மீதான ரெட் கார்டை தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது. இதனால் நேற்று முதல் “வெந்து தணிந்தது காடு” படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாவது போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. ஆக்‌ஷன் படங்களை மட்டுமே நடித்து வந்த சிம்பு தன் உடலை வருத்தி இப்படியான கதாப்பாத்திரத்தில் நடிப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த பரமசுந்தரி பாடல்… ரஹ்மான் ரசிகர்கள் கொண்டாட்டம்!