தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த சில காலமாக இளையராஜாவின் காப்புரிமை, சிவகுமார் செல்பி, வைரமுத்து மீடூ என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கித்தவித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது , தனது தரைகுறைவான பேச்சால் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார் . இவர் சமீபத்தில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் காலாட்சேப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பேசினார். அப்போது, நாய்க்கு பேனர் வைக்கின்றனர் என்றும், சினிமாவில் பெண்கள் வாய்ப்பு பெறுவது குறித்தும் சர்ச்சையான கருத்தை பேசியுள்ளார்.
சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு பெற பெண்கள் அரைகுறை ஆடை அணிவது மிகுந்த வேதனையை கொடுக்கிறது. வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் இப்படி கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுகின்றனர். நம் கலாச்சாரம் அந்த அளவிற்கு கீழ் இறங்கிவிட்டது என கடுமையாக விமர்சித்தார்.
மேலும் பேசிய அவர், "தனக்கு பிடிக்காத இரண்டு விஷயம், ஒன்று "செல்பி எடுப்பது" மற்றொன்று பேனர் வைப்பது . ஆனால் தற்போது இந்த உலகத்தில் பிறந்த நாய்க்கு கூட பேனர் வைக்கின்றனர் என்று பேசியுள்ளார்.