எனக்கு மனநல பாதிப்பு எதுவும் இல்லை, நான் நன்றாக இருக்கிறேன் என காணமால் போனதாக கூறப்பட்ட பாடகி சுசித்ரா போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு சுசி லீக்ஸ் என்ற பெயரில் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் கணக்கில் இருந்து சினிமா பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் சில வெளியாகின. இது அப்போது சர்ச்சைகளை உண்டாக்கியது. இதன் பின்னர் சுசித்ராவின் கணவர், சுசித்ராவின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.
இதன்பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து அக்கா வீட்டில் வசித்து வந்தார் சுசித்ரா. இந்நிலையில் சுசித்ராவை காணவில்லை என அவரது சகோதரி போலீஸில் புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்று சுசித்ராவின் மொபைல் மற்றும் கார் நம்பரை வைத்து அவர் தி.நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸார் சுசித்ராவிடம் அப்போது மேற்கொண்ட விசாரணையில் சுசித்ரா பின்வருமாறு பேசியுள்ளார், நான் காணாமல் போகவில்லை. எனது சகோதரியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் அவரது வீட்டில் இருந்து வெளியேறிவிட்டேன். வெற்று பத்திரம் ஒன்றி எனது சகோதரி கையெழுத்து வாங்கவே என்னை தேடி வருகிறார்.
என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் போல எனது குடும்பத்தினர் நடத்துகின்றனர். எனக்கு மனநல பாதிப்பு ஏதுமில்லை. இருப்பினும் காவல்துறையினரின் அறிவுறுத்தல்படி அண்ணாநகரில் உள்ள மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.