சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடியில் ரிலிஸ் ஆவது குறித்தான ரகசியம் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரக்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் இந்த படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் சூர்யாவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தினை ஏன் சூர்யா ஓடிடியில் ரிலிஸ் செய்தார் என்பது குறித்த தகவல் ஒன்று இப்போது சொல்லப்படுகிறது. தனது நண்பர்களுடன் இந்த படத்தை பார்த்த சூர்யா, பி மற்றும் சி செண்டர்களில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறாது என்ற கமெண்ட்களை பலரிடம் இருந்து பெற்றுள்ளார். அதனால்தான் படத்தை ஓடிடிக்கு கைமாற்றி விட்டதாக சொல்லப்படுகிறது.