நடிகர் ரஜினிகாந்த்தின் இளையமகள் சௌந்தர்யா தமிழ் சினிமாவில் இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.
ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் கிட்டத்தட்ட முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அடுத்த படத்தில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரஜினியின் இளையமகளான சௌந்தர்யா எப்படியாவது தன் தந்தையை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசையில் உள்ளாராம்.
ஏற்கனவே கோச்சடையான் எனும் மோஷன் பிக்சர்ஸில் அவரை சில நாட்கள் இயக்கினார். ஆனால் முழு நீள கமர்ஷியல் படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசையில் இப்போது ரஜினியை நச்சரித்து வருகிறாராம். இதனால் ரஜினி அடுத்த படத்தை இளைய மகளுக்குக் கொடுக்கலாமா என்ற ஆலோசனையில் உள்ளாராம்.