Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

SPB வசித்த தெருவுக்கு அவரின் பெயர் சூட்டிய தமிழக அரசு…SPB சரண் நன்றி!

SPB வசித்த தெருவுக்கு அவரின் பெயர் சூட்டிய தமிழக அரசு…SPB சரண் நன்றி!

vinoth

, வியாழன், 26 செப்டம்பர் 2024 (07:35 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி பாடகரும் இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவருமான எஸ் பி பாலசுப்ரமண்யம்  கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பால் நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது அவரின் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் தீரா துயரத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவரது இல்லத்தில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரது நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் பல ஆண்டுகளாக நுங்கம்பாக்கம் காம்தார் நகர் பகுதியில் அவர் வசித்து வந்த சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட வேண்டும் என்று அவரது மகன் கோரிக்கை வைத்திருந்தார்.

அதையேற்று தற்போது தமிழக அரசு காம்தார் நகர் பிரதான சாலைக்கு எஸ் பி பாலசுப்ரமணியம் சாலை எனப் பெயர் மாற்றியுள்ளது. இதையடுத்து தமிழக அரசுக்கு எஸ் பி பி சரண் நன்றி தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நந்தன் படத்துக்கு தமிழக அரசின் உயரிய விருது வழங்கப்படவேண்டும்… இயக்குனர் அறம் கோபி பரிந்துரை!