இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.
இதற்கிடையில் ராஷ்மிகா, பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அதை இருவருமே மறுத்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் ஒன்றாக மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றதாக தகவல்கள் பரவின.
சமீபத்தில் ராஷ்மிகா அவர் நடிக்க ஒப்பந்தமான ஒரு படத்தில் இருந்து விலகியுள்ளார். வெங்கி குடுமுலா இயக்கிவரும் இந்த படத்தில் சில நாட்கள் நடித்த பின்னர் விலகினார் ராஷ்மிகா. இப்போது அந்த படத்தில் அவருக்கு பதில் ஸ்ரீலீலா இணைந்துள்ளார்.