ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.
, சனி, 28 செப்டம்பர் 2024 (18:19 IST)
சென்னை சர்வதேச திரைப்பட விழா, ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்துடன் இணைந்து, ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஏ.வி.எம் ஆடிட்டோரியத்தில் இன்று MOSFILM 100- வது ஆண்டு விழாவினை பிரமாண்டமாக நடத்தியது.
இந்த நிகழ்வு , ரஷ்யாவின் மிகச் சிறந்த திரைப்பட ஸ்டுடியோக்களில் ஒன்றான MOSFILM யின் வளமான பாரம்பரியத்தை கௌரவிப்பதோடு,
3 நாள் சினிமா கொண்டாட்டத்தின் துவக்கமாகவும் அமைந்திருந்தது.
சென்னையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் துணைத் தூதரகத் தலைவர் மேதகு. வலேரி கோட்சேவ் மற்றும் சென்னையில் உள்ள ரஷ்ய மாளிகையின் துணைத் தூதரும் இயக்குநருமான அலெக்சாண்டர் டோடோனோவ் ஆகியோர் இந்த தொடக்க விழாவில் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினர் இருவருமே இருநாட்டு கலாச்சார ஒத்துழைப்பிற்கு தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
மேலும், உலகளாவிய திரைப்படத் துறையில் ரஷ்ய சினிமாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.
அடுத்த கட்டுரையில்