ஸ்டார் நெட்வொர்க்கின் ஹாட்ஸ்டார் இணையதள செயலிக்குப் போட்டியாக சன் நெட்வொக் ஒரு செயலியை அறிமுகம் செய்யவுள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தற்போது இணையதளத்திலும் உள்ளது. யூடியூப் மூலம் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்த்துக்கொள்ளலாம். அதேபோன்று ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் தனக்கென ஒரு செயலியை அறிமுகம் செய்தது. அந்த செயலியில் நேரலை மற்றும் பழைய நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கலாம்.
இந்த செயலி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது யூடியூப் தளத்திற்கு இணையாக இந்த ஹாட் ஸ்டார் செயலி பிரபலமடைந்துள்ளது. இதேபோன்று சன் நெட்வொர்க்கும் தற்போது புதிதாக ஒரு செயலியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
தமிழில் விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு பெயர் பெற்றது என்றால், சன் டிவி சீரியல்களுக்கு பெயர் பெற்றது. இதனால் சன் நெட்வொர்க்கின் இந்த செயலி விஜய் டிவியின் ஹாட் ஸ்டார் நிகழ்ச்சிகளுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.