Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Thalaivar 173: சுந்தர்.சிக்கு டபுள் சேலரி!.. ரஜினி படத்தின் மொத்த பட்ஜெட் இவ்வளவு கோடியா?..

Advertiesment
Thalaivar 173

Bala

, வெள்ளி, 7 நவம்பர் 2025 (20:44 IST)
அருணாச்சலம் படத்திற்கு பின் 28 வருடங்கள் கழித்து இயக்குனர் சுந்தர்.சியும் ரஜினியும் ஒரு புதிய படத்தில் இணையவிருக்கிறார்கள். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
சுந்தர்.சி காமெடி படங்களை எடுப்பவர். ரஜினியோ ஆக்சன் ஹீரோ. இருவருக்கும் எப்படி செட்டாகும் என்கிற கேள்வி ரசிகர் மனதில் எழுந்திருக்கிறது. ஏனெனில் சுந்தர்.சி எடுத்த ஆக்சன் படங்கள் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. சுந்தர்.சி- யின் பலமே காமெடி படங்கள்தான். அல்லது அரண்மனை சீரியஸ் போன்ற ஹாரர் காமெடி படங்கள்தான். எனவே ரஜினிய வைத்து அவர் என்ன மாதிரியான படத்தை கொடுக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மனதில் எழுந்திருக்கிறது.
 
இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 275 கோடி என செய்திகள் வெளிவந்திருக்கிறது. இதில் ஆச்சரியம் என்னவெனில் இந்த படத்தை இயக்க சுந்தர்.சிக்கு 30 கோடி வரை சம்பளம் பேசியிருக்கிறார்களாம். சுந்தர்.சி தற்போது இயக்கி வரும் அரண்மனை 2 படத்திற்கு 15 கோடி சம்பளம்தான் வாங்கி இருக்கிறார். ரஜினி படம் என்பதால் அதைவிட இரண்டு மடங்கு சம்பளம் கொடுத்துள்ளனர் என்கிறார்கள்.
 
இந்த படத்தின் ஷூட்டிங் 2026 மார்ச் மாதம் துவங்கவிருக்கிறது. சிலர் தை மாசம் துவங்கப் போகிறது என்கிறார்கள். எப்படி இருந்தாலும் 2026 அக்டோபர் மாதம் படத்தின் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர். ஏனெனில் 2027 ஜனவரி பொங்கலுக்கு இப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜயின் பாடும் கடைசி பாடல்.. ‘ஜனநாயகனின்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்படி வந்துருக்கு தெரியுமா?