இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் திரைப்படங்கள் தயாராகி வருவது அதிகரித்து வருகிறது. ‘2.0’, பாகுபலி, பாகுபலி 2, ‘சாஹோ’ ஆகிய திரைப்படங்கள் பெரிய பட்ஜெட் படங்கள் ஆகும். அந்த வகையில் சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் திரைப்படம் ‘சயிர நரசிம்ம ரெட்டி’
சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா, விஜய்சேதுபதி, அமிதாப்பச்சன், கிச்சா சுதீப், அனுஷ்கா, ஜெகபதிபாபு, உள்பட பல பிரபலங்கள் நடித்து வரும் இந்த படம், வெள்ளையனை எதிர்த்து குரல் கொடுத்த ஒரு வீரனின் உண்மைக்கதை ஆகும். இந்த படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி பிறந்த நாளில் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது
இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து பெற்றுள்ளது. தயாரிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றில் பெரும் அனுபவம் உள்ள இந்த நிறுவனத்தில் கையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமை கிடைத்துள்ளதால் இந்த படம் பெரிய அளவில் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ள இந்த படத்திற்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா தயாரித்து வருகிறார்.