Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

44 Years of Rajinism: கமலுக்கு போட்டியாக ட்விட்டரில் சூப்பர் ட்ரெண்டாகும் ரஜினி!

44 Years of Rajinism: கமலுக்கு போட்டியாக ட்விட்டரில் சூப்பர் ட்ரெண்டாகும் ரஜினி!
, சனி, 17 ஆகஸ்ட் 2019 (14:06 IST)
இந்திய சினிமாவின் பெரும்பாலான நடிகர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயது ரசிகர்கள் மட்டும் இருப்பது வழக்கம். ஆனால் அனைத்து வயது ரசிகர்கள் உள்ள ஒரு நடிகராக கடந்த 44 வருடங்களாக திரைத்துறையில் ஜொலித்து வருகின்றார் நடிகர் ரஜினிகாந்த். 


 
பஸ் கண்டெக்டராக  இருந்து வந்த ரஜினிக்கு கடவுளின் அற்புத படைப்பாக அவரது ஸ்டைல் அவர் கூடவே பிறந்துவிட்டது. அது தான் அவர் சினிமாவில் நுழைய மிகப்பெரிய உந்துகோலாக அமைந்தது. கடந்த 1975ம் ஆண்டு வெளிவந்த அபூர்வ ராகங்கள் படத்தில் இயக்குனர் கே. பாலசந்தர் தான் ரஜினியை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்து ரசிகர்களுக்கு சிறந்த கலைஞனை கொடுத்தார்.    
 
அந்த படத்தில் கமல் ஹாசனும் நடித்திருப்பார். கமல் , ரஜினியின் நட்பு முதல் படத்திலேயே துவங்கியது. அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் இன்றைய நாளிலும் அபூர்வ ராகங்கள் படத்தை யாரும் மறந்துவிடமுடியாது. 

webdunia

 
இந்நிலையில் ரஜினி சினிமாவில் நுழைந்து வருகிற ஆகஸ்ட் 18ம் தேதியோடு (நாளை) 44 வருடம் பூர்த்தி அடைகிறது. இதனை கொண்டாடும் விதமாக ரஜினி ரசிகர்கள் #44YearsofRajinism என்ற பெயரில் ஹேஸ்டேக் உருவாகி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் ரஜினி இதுவரை நடித்து ஹிட் அடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்தின் லுக்கை ஒன்றிணைத்து மாஸான ஒரு போஸ்டரை ரஜினியின் தீவிர ரசிகரான இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உருவாகி வெளியிட்டுள்ளனர். 
 
சமீபத்தில் தான் கமலின் 60 வது வருட சினிமா பயணத்தை கொண்டும் விதமாக #60Yearsofkamalism என ஹேஸ்டேக் உருவாகி கமல் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்ததையடுத்து தற்போது ரஜினி ரசிகர்கள் அதை வீழ்த்த மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெய்ப்பூர் செல்லும் ரஜினி & கோ – தர்பார் பரபர படப்பிடிப்பு !