சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போதைக்கு எதிராக கையெழுத்திட்டுள்ளார்.
தமிழ் நாட்டில், 10 ஆண்டுகளில் 70% போதைப்பழக்கம் அதிகரித்துள்ளதாகவும், இந்தியா முழுவதும் சுமார் 10 கோடி பேர் போதைக்கு அடிமையாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
இளைஞர்கள் சிலர் போதைக்கு அடிமையாகி வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில், தமிழ் நாடு முழுவதிலும் போதைக்கு எதிராக 1 கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழ் நாட்டில் உள்ள முக்கிய பிரபலங்கள், ஆளுமைகளைச் சந்தித்து கையெழுத்துப் பெற்று வரும் நிலையில், இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.