சிறுத்தை சிவா இயக்கத்தில் அடுத்து சூர்யா ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறுத்தை திரைப்படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றவுடன் இயக்குனர் சிவா, சூர்யாவோடு ஒரு படத்தில் இணைய ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் சிறுத்தை சிவாவுக்கு அப்போது அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அந்த படம் தள்ளிப்போனது. அதன் பின்னர் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் இணைய வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது அண்ணாத்த படத்தை முடிந்துள்ள நிலையில் சிறுத்தை சிவா சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.
இந்த படம் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னமும் தொடங்கப்படவில்லை. இதனால் சூர்யா இப்போது பாலாவின் புதிய படத்தில் நடிக்க சென்றுவிட்டார். அடுத்து வாடிவாசல் படமும் தொடங்க உள்ள நிலையில் சிறுத்தை சிவா படம் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இப்போது படத்தைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இது ஒரு வரலாற்று திரைப்படமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.