Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சயிரா நரசிம்மரெட்டி: சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

சயிரா நரசிம்மரெட்டி: சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்
, திங்கள், 23 செப்டம்பர் 2019 (21:26 IST)
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் அவரது மகன் ராம்சரண் தேஜாவின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’சயிரா நரசிம்மரெட்டி’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிந்து வரும் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது
 
 
இந்த நிலையில் இன்று இந்த படம் சென்சாருக்கு சென்றது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து ஒரு கட் கூட செய்யாமல் முழு படத்தையும் அப்படியே வழங்கி படத்திற்கு யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் படக்குழுவினர் மிகுந்த சந்தோசம் அடைந்தனர். 
 
 
மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் 49 நிமிடங்கள் என தகவல் வெளிவந்துள்ளது. முதல் பாதி 79 நிமிடங்களும் இரண்டாம் பாதி 90 நிமிடங்கள் எனவும் படக்குழுவினர் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் நீளம் இருந்தாலும் ஒரு முழுநீள வரலாற்று படத்தை பார்த்த திருப்தி இந்த படத்தை பார்த்தவுடன் இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் 
 
 
சிரஞ்சீவியுடன் நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா, அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, ஜெகபதிபாபு, கிச்சா சுதீப், உள்ளிட்ட பலர் நடித்துள்ள  இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். அமித் த்ரிவேதி இசையில், ரத்னவேலு ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரை நிர்வாணமாக நடித்தது உண்மையா? நடிகை பிரியங்கா விளக்கம்